×

12ம் தேதி முதல் துவங்குகிறது, மாவட்ட கலெக்டர் அழைப்பு வரும் 4ம் தேதி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு: 593 பேர் எழுதுகின்றனர்

 

திருவாரூர், பிப். 2: திருவாரூர் மாவட்டத்தில் நாளை மறுதினம் நடைபெறும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் தேர்வினை 593 பேர்கள் எழுதவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் 2024ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு நாளை மறுதினம் (4ம் தேதி) நடைபெறவுள்ளது.

இதற்காக மாவட்டத்தில், 2 தேர்வு மையங்களான ஜி.ஆர்.எம். பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 274 தேர்வர்களும், வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 319 தேர்வர்களும் என மொத்தம் 593 பேர்கள் இந்த தேர்வினை எழுதஉள்ளனர். வினாத்தாட்கள் ஒரு கட்டுக்காப்புமையத்தில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்புடனும் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், தேர்வு மையங்களில் காவல்துறையுடன் இணைந்து எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post 12ம் தேதி முதல் துவங்குகிறது, மாவட்ட கலெக்டர் அழைப்பு வரும் 4ம் தேதி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு: 593 பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Collector ,Charu ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு