×

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு

 

சேலம், பிப்.2:சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில், வருவாய்துறை, போலீசார், சுகாதாரத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியோருடன் தொழிலாளர் துணை, உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் சேலம் செவ்வாய்பேட்டை, கந்தம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வெள்ளிப்பட்டறை, நகை கடை, பாத்திர கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டாய்வின் போது, குழந்தை தொழிலாளர் மற்றும் வளரினம் பருவத்தினர் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

ஆய்வின் போது, குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவ தொழிலாளர்கள் எவரையும் தொழிற் கூடங்களில் பணியமர்த்த கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 18வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர் பணிக்கு அமர்த்துவது குற்றம். அவ்வாறு பணி அமர்த்தினால் நிறுவன உரிமையாளர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹20 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி எச்சரித்துள்ளார்.

The post தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Salem ,Krishnaveni ,Revenue Department ,District Child Protection Unit ,Salem Sewwaipet ,Kandampatti ,Department ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...