×

சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரியில் மட்டும் 84.63 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல்

 

சென்னை, பிப்.2: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம், கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மொத்தம் 84,63,384 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 12ம் தேதி மட்டும் 3,64,521 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,43,885 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 37,92,912 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 15,456 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 8,792 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 9,02,336 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், பேடிஎம் ஆப் மற்றும் போன்பே போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரியில் மட்டும் 84.63 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Metro train ,Chennai ,Metro Rail ,Chennai Airport ,Wimco Nagar Workshop ,Parangimalai ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: 3...