×

ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு நிலஅளவீடு செய்ய புதிய வசதி: கலெக்டர் தகவல்

 

அரியலூர், பிப்.2: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்திக்குறிப்பு; நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் நவம்பர் 20 அன்று தொடங்கி வைத்தார் . இப்புதிய சேவையின் மூலம் பொது மக்கள் நில அளவை செய்ய ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட ‘அறிக்கை மற்றும் வரைபடம்’ ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.

The post ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு நிலஅளவீடு செய்ய புதிய வசதி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Ariyalur District ,Collector ,Animeri Swarna ,Tamil Nadu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...