×

10% பேரிடம் 60% செல்வம் இது பணக்காரர்களின் அரசு: ப.சிதம்பரம் கடும் விளாசல்

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது; ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்யில் பொறுப்புக்கூறல் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகிய இரண்டையும் காணவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற விவரமும் இல்லை. பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தில் ஆளும் பா.ஜ அரசின் அணுகுமுறை பணக்காரர்களுக்கு ஆதரவாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாக்குறுதியளிக்கப்பட்ட இரண்டு கோடி வேலைகள் பற்றியோ அல்லது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அல்லது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது பற்றியோ பேசவில்லை.

இது பணக்காரர்களுக்கான அரசு. பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால் நடத்தப்படும் அரசு இது. உணவுப் பணவீக்கம் தற்போது 7.7 சதவீதமாக உள்ளதை குறிப்பிடவில்லை. சீனாவின் ஜிடிபி நமது ஜிடிபியை விட ஐந்தரை மடங்கு அதிகம். அவர்களின் ஆண்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு மூன்று சதவிகிதம் வளர்ச்சியடைந்தால், நாம் 15 சதவிகிதம் வளர வேண்டும். எனவே ஜிடிபி பற்றி பேச வேண்டாம். வளர்ச்சி, தனிநபர் வருமான வளர்ச்சி பற்றி பேசுங்கள்.  கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு முன்னேறியுள்ளது என்பது குறித்து கடந்த மூன்று நாட்களில் அலுப்பூட்டும் வகையில் மீண்டும் மீண்டும் தற்பெருமை பேச்சுக்கள் பேசப்படுகின்றன.

10 சதவீதம் பேர் நாட்டின் செல்வத்தில் 60 சதவீதத்தை வைத்திருக்கிறார்கள். தேசிய வருமானத்தில் 57 சதவீதத்தை சம்பாதிக்கிறார்கள் என்பதையும், கடந்த 10 ஆண்டுகளில் வருமான சமத்துவமின்மை கணிசமாக விரிவடைந்துள்ளது என்பதையும் அரசு அலட்சியமாக கடந்துள்ளது. இந்த அரசு நடைமுறையில் 50 சதவீத மக்களை மறந்துவிட்டது. 10 ஆண்டுகால பா.ஜ ஆட்சியில் பொருளாதார நிலை மோசமாக உள்ளது என்பதை இந்திய மக்கள் அங்கீகரிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post 10% பேரிடம் 60% செல்வம் இது பணக்காரர்களின் அரசு: ப.சிதம்பரம் கடும் விளாசல் appeared first on Dinakaran.

Tags : B. Chidambaram ,Union Finance Minister ,P. Chidambaram ,Union Government ,
× RELATED காங். தேர்தல் அறிக்கையை நிர்மலா சீதாராமன் படித்தார் – ப.சிதம்பரம்