×

25 கோடி மக்களை வறுமையில் இருந்து பாஜக அரசு மீட்டுள்ளது: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பாஜக அரசு மீட்டுள்ளதாக ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நேரடியாக வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு நிதி வழங்கியதால் அரசுக்கு ரூ.2.7 லட்சம் கோடி மீதம் உள்ளது. ஏழைகள், விவாசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய 4 தரப்பின் முன்னேற்றத்துக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிப்பதாக ஒன்றிய நிதியமைச்சர் கூறினார்.

2014-ம் ஆண்டுக்கு முன் நாடு பல்வேறு சவால்களை சந்தித்தது. நாடு பெரும் சவால்களை சந்தித்த நேரத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2014-ம் ஆண்டில் பொறுப்பேற்றது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என அமைச்சர் கூறினார். சமுக அடிப்படையிலும், புவியியல் அடிப்படையிலும் மேம்பட்டு திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறினார்.

மக்கள் மீண்டும் பாஜக ஆட்சியை தேர்தெடுப்பர்கள் என நம்புகிறோம். ரேஷனில் இலவச உணவுப்பொருள் கொடுத்ததன் மூலம் உணவுக்கான கவலையை போக்கிவிட்டோம்என நிர்மழா சீதாராமன் தெரிவித்தார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்துகிறோம் என அமைச்சர் கூறினார்.

2047-ல் வளர்ச்சி பெற்ற புதிய இந்தியா உருவாகும். பாஜக அரசின் இலக்காக சமூக நீதி உள்ளது. 4 முக்கிய அம்சங்களில் கவணம் செலுத்துவதே அரசின் நோக்கம். வறுமை ஒழிப்பு, மகளிருக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, அனைவருக்கும் உணவு வழங்குவதே நோக்கம் என ஒன்றிய அமைச்சர் கூறினார்.

The post 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பாஜக அரசு மீட்டுள்ளது: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP government ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,Finance Minister ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...