×

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடக்கம்.!

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்குகிறது. சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள், சென்னை கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகிறது. நேற்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையாக செயல்பட தொடங்கிவிட்டது.

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சை, சேலம், கோவை உள்பட சுமார் 100 நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கத்தில் தான் புறப்படுகின்றன. விழுப்புரம் கோட்டத்தில் செல்லும் பேருந்துகள் மட்டுமே தாம்பரம் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு விட்டு, கிளாம்பாக்ககத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 1ம் தேதியான இன்று முதல் மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்குகிறது.

கிளாம்பாக்கத்தில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பயணம் செய்யக்கூடிய விருப்பம் உள்ளவர்கள் ஆயிரம் மதிப்பிலான பயணத்தை மாதந்தோறும் ஒன்றாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பயணிக்கும் வகையிலான மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 11ம் தேதி முதல் மறு மாதம் 10ம் தேதி வரை பயணம் செய்யும் வகையிலான 50 சதவீதம் மாணவர் சலுகை , பயணத்தை பிரதி மாதம் ஒன்றாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வழங்கப்படும் 60 வயது பூர்த்தி அடைந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணம் இல்லாத பயணத்தை உள்ளிட்ட 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்களும் வழங்கப்படும் பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

The post கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடக்கம்.! appeared first on Dinakaran.

Tags : Clambakkam Artist Century Bus Terminal ,Chennai ,Discount Ticket Sales Centre ,Klampakkam Bus Terminal ,Klambakak ,Tamil Nadu ,Clambakkam ,Artist Century ,Bus ,Terminal ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...