×

தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்: கற்கள் வீசி தாக்குதல் போலீஸ் தடியடி

திருமலை: கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு தொகுதிக்கு உட்பட்ட முத்தனூரில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணையும் கூட்டம் நேற்று நடந்தது. இதனால் தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் அருகே திரண்டு இருந்தனர்.

இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சுதிர் தனது ஆதரவாளர்களுடன் சென்று தெலுங்கு தேசம் கட்சியின் நகர தலைவர் குடுமுலா சசிதர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ வேட்பாளர் பூபேஷ் சம்பவ இடத்துக்கு வந்தபோது, ​​இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மோதலை தடுக்க முயன்றும் யாரும் கேட்காததால் தடியடி கூட்டத்தை நடத்தி கலைத்தனர்.

The post தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்: கற்கள் வீசி தாக்குதல் போலீஸ் தடியடி appeared first on Dinakaran.

Tags : Telugu Desam ,Y.S.R. Congress ,Tirumala ,YSR Congress party ,Kadapa district ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில தேர்தலில் மதுபானம் ஆறாக...