×

நீலகிரி திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

 

ஊட்டி, ஜன.31: நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஊட்டியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. காந்தியடிகளின் 75வது நினைவு நாளையொட்டி நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். மாநில பொறியாளர் அணி செயலாளர் மற்றும் ஊட்டி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கருணாநிதி, மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், லட்சுணி, தமிழ்செல்வன்,

பொருளாளர் நாசர் அலி, செயற்குழு உறுப்பினர் இளங்கோ, ராஜூ, செந்தில், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அனைத்து சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத்அலி, கோத்திகிரி ஒன்றிய செயலாளர் நெல்லைகண்ணன், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஷ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நீலகிரி திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri DMK ,Ooty ,Nilgiri district DMK ,Gandhiji ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்