×

அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை

லாகூர்: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். அப்போது அவரை பதவி நீக்கம் செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சதி திட்டம் தொடர்பான ரகசிய ஆவணங்களை அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் இம்ரான் கானுக்கு அனுப்பியது. இந்த ரகசிய ஆவணத்தை இம்ரான் கான் பொதுவௌியில் கசிய விட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வௌியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு அண்மையில் ஜாமீன் கிடைத்தது. இதை எதிர்த்து சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இம்ரான் கான், முகமது குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

The post அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Imran Khan ,LAHORE ,Pakistan Tehreek-e-Insaf Party ,Dinakaran ,
× RELATED ராகுலை பிரதமராக்க பாக். துடிக்கிறது: பிரதமர் மோடி பிரசாரம்