×

இலங்கை கடைசி தமிழ் மன்னனுக்கு 192வது நினைவஞ்சலி அரசு விழா நடத்த கோரிக்கை வேலூர் பாலாற்றங்கரை

முத்துமண்டபத்தில்வேலூர்: வேலூரில் அமைந்துள்ள இலங்கை கடைசி தமிழ் மன்னன் விக்கிரம ராஜசிங்கனின் 192வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அவரது வாரிசுகள் நேற்று அஞ்சலி செலுத்தினர். இலங்கையின் கண்டியை தலைநகராக கொண்டு கடந்த 18ம் நூற்றாண்டின் கடைசியில் அரசு புரிந்த மதுரை தெலுங்கு நாயக்க மன்னரின் வம்சமான ராஜாதி ராஜசிங்கன் வாரிசுகள் இன்றி இறந்தார். இதனால் புதுக்கோட்டையை சேர்ந்த, மதுரை தெலுங்கு நாயக்கர் வம்சத்தை சேர்ந்த இவரது மனைவியின் தம்பியான கண்ணுச்சாமி, தமிழகத்தில் இருந்து சென்று கண்டி அரசனாக  விக்கிரம ராஜசிங்கன் என்ற பெயருடன் 1798ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் நாள் பொறுப்பேற்றார். இந்நிலையில், விக்கிரம ராஜசிங்கனின் அமைச்சரவையில் இருந்த பிலிமாத்தலா என்ற சிங்களனின் உதவியுடன் 1803, 1809ம் ஆண்டுகளில் கண்டி ராஜ்யத்துக்குள் சிரமமின்றி படைகளுடன் நுழைந்தனர் ஆங்கிலேயர்கள். ஆனால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனாலும் பல்வேறு உள்நாட்டு சதிச்செயல்களால் ஆங்கிலேயரிடம் பிடிபட்டார்.

The post இலங்கை கடைசி தமிழ் மன்னனுக்கு 192வது நினைவஞ்சலி அரசு விழா நடத்த கோரிக்கை வேலூர் பாலாற்றங்கரை appeared first on Dinakaran.

Tags : Vellore Balarangarai ,Sri Lanka ,Muthumandapathil ,King ,Vikrama Rajasinghan ,Kandy ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...