×

பாஜக கூட்டணியில் இணைந்த நிதிஷூக்கு ‘டிமென்ஷியா’ நோய்: சிவசேனா எம்பி தாக்கு

மும்பை: பாஜக கூட்டணியில் இணைந்த நிதிஷ் குமாருக்கு ‘டிமென்ஷியா’ நோய் பாதிப்பு உள்ளதாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறினார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

‘இந்தியா’ கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி உடனான கருத்து மோதலால், மகா கூட்டணியில் இருந்து விலகி கடந்த சில தினங்களுக்கு முன் பாஜகவில் நிதிஷ் குமார் இணைந்தார். அதனால் அவர் தனது முதல்வர் பதவியில் இருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அரலேக்கரிடம் ஒப்படைத்தார். கூட்டணி ஆட்சியும் கலைந்தது. மாலையில் பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இவரது இந்த நடவடிக்கை தேசிய அரசியலில் கேலிக்கூத்தாக்கியது.

இதுகுறித்து சிவசேனா (உத்தவ்) அணி மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத் கூறுகையில், ‘நிதிஷ் குமாருக்கு டிமென்ஷியா (மூளையில் ஏற்படும் பாதிப்பு அல்லது காயத்தால் சிந்தனைத் திறன், நினைவாற்றல் போன்றவற்றை பாதிக்கும் ஒருவகை நோய்) இருக்கிறது. அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பது அவருக்கே புரியவில்லை. எனவே அவருக்கு டிமென்ஷியா நோய் இருப்பது தெரியவருகிறது. அவர் முறையாக மருந்து சாப்பிட்டால், தான் மீண்டும் பாஜகவில் சேர்ந்ததை உணர்ந்து கொள்வார். பின்னர் மீண்டும் ‘இந்தியா’ கூட்டணிக்கு வரவாய்ப்புள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய் நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும், அரசியலுக்கும் மிகவும் ஆபத்தானது’ என்று கூறினார்.

The post பாஜக கூட்டணியில் இணைந்த நிதிஷூக்கு ‘டிமென்ஷியா’ நோய்: சிவசேனா எம்பி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Shiv Sena ,Nitishuk ,BJP alliance ,Mumbai ,Sanjay Rawat ,Nitish Kumar ,Rashtriya Janata Dal ,Congress ,United Janata Dal ,Chief Minister ,Bihar ,Nitish ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை