×

ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் இன்று சஸ்பெண்ட்

டெல்லி: தமிழகத்தை சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரியும், ஜிஎஸ்டி ஆணையத்தின் துணை ஆணையருமான பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில், இன்று அவர் பணியிடைநீக்கம் செய்யபட்டுள்ளார். பாலமுருகன் சேலம் ஆத்தூரை சேர்ந்த விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரத்தில், ஒன்றிய நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

3 மாதங்களுக்கு முன்னதாகவே விருப்ப ஓய்வு கேட்டு விண்ணபித்திருந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு விண்ணப்பம் நிராகரிக்கபட்டு, நாளை ஓய்வு பெற இருந்த நிலையில், இன்று அவர் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் உள்ள ஜிஎஸ்டி ஆணையரகத்தில் பணியாற்றிய போது தன்னால் ஹிந்தியில் எழுத முடியாது, தனக்கு ஹிந்தி தெரியாது என ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக சேலத்தில் அவரது வீட்டில் உண்ணாவிரதம் இருந்ததற்காக போது அந்த துறையின் உயரதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யபட்டார். இதே போல் 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் ராஜிணாம செய்ய கோரி கடிதம் எழுதியிருந்தார். அப்ப்போது அவரது ராஜினாம கடிதம் ஏற்றுகொள்ளப்படவில்லை. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்னதாக விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அது நிராகரிக்கபட்டதை அடுத்து, நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் இன்று பணியிடைநீக்கம் செய்யபட்டுள்ளார்.

The post ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் இன்று சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : GST ,Deputy Commissioner ,Balamurugan ,Delhi ,Tamilaga ,IRS ,GST Commission ,Samman ,Enforcement Department ,Salem ,Athur ,Dinakaran ,
× RELATED மது கடைகளை மூட உத்தரவு