×

சமூக நீதி – சமத்துவத்திற்கானக் களமாகவும், “தமிழ் மாணவர் மன்றம்” சிறக்க வாழ்த்துகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: சமூக நீதி – சமத்துவத்திற்கானக் களமாகவும், “தமிழ் மாணவர் மன்றம்” சிறக்க வாழ்த்துகள் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் உதயமாகிறது தமிழ் மாணவர் மன்றம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில் பதிவிட்டதாவது; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பள்ளி மாணவராக இருந்தபோது தொடங்கிய அமைப்பு “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்”. கலைஞர் நூற்றாண்டில் இப்போது மீண்டும் பற்றத் தொடங்குகிறது அந்த நீறுபூத்த நெருப்பு. தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் உதயமாகிறது “தமிழ் மாணவர் மன்றம்”.

அதற்கான கொடி – இலச்சினையை dmk_studentwing நிர்வாகிகள் முன்னிலையில் இன்று அறிமுகப்படுத்தி வெளியிட்டோம். இளம் மனங்களில் தமிழ் மொழி, பண்பாடு, கல்வி உரிமை சார்ந்த உணர்வுகளை விதைப்பதோடு, சமூக நீதி – சமத்துவத்திற்கானக் களமாகவும், “தமிழ் மாணவர் மன்றம்” சிறக்க வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post சமூக நீதி – சமத்துவத்திற்கானக் களமாகவும், “தமிழ் மாணவர் மன்றம்” சிறக்க வாழ்த்துகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Tamil Students Forum ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,Tamil Student Forum ,Tamilnadu ,Tamil Student Council ,
× RELATED மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!