×

வழக்கமாக ஜனவரி மாதத்தில் துவங்கும் செங்கல் உற்பத்தி மண் தட்டுப்பாட்டால் மந்தம் இன்னும் 2 மாதங்களாகும் என எதிர்பார்ப்பு

வலங்கைமான்: வலங்கைமான் பகுதியில் வழக்கமாக ஜனவரி மாதத்தில் துவங்கும் செங்கல் உற்பத்தி மணல் தட்டுப்பாட்டால் மந்தமாகியுள்ளது. இந்த பணிகள் தொடங்க இன்னும் 2 மாதங்களாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நெல், எள், பருத்தி உள்ளிட்ட வேளாண்மை பணிகளோடு வேளாண்மை சார்ந்த தொழில்களான மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு உள்ளிட்டவைகளில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண்மையோடு சின்ன சிவகாசி என அழைக்கப்படும் அளவிற்கு பட்டாசு உற்பத்தியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது .மேலும் வலங்கைமானுக்கு பெருமை சேர்க்கும் விதமாக செங்கல் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது

The post வழக்கமாக ஜனவரி மாதத்தில் துவங்கும் செங்கல் உற்பத்தி மண் தட்டுப்பாட்டால் மந்தம் இன்னும் 2 மாதங்களாகும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Walangaiman ,Valangaiman ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...