×

சேவை செய்யக்கூடிய நல்ல அமைப்புகள் மூலம் தான் நாட்டை முன்னேற்ற முடியும்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் பொரவாச்சேரி கிராமத்தில் ஏழை மீனவர்களுக்கு தமிழ் சேவா சங்கம் சார்பில் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு சாவியையும், பெண்களுக்கான தையல் இயந்திரமும் வழங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழ் சேவா சங்கம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்தல், மகளிருக்கு தையல் இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த பணிகள் தொடர வேண்டும். நான் பல கிராமங்களுக்கு சென்றேன். பூர்வ குடிமக்களையும், மீனவர்களையும் சந்தித்தேன். நமது நாடு உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் 5வது நிலையை எட்டி உள்ளோம். தமிழ்நாடும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இங்கு உள்ள பூர்வ குடிமக்களின் பங்களிப்பும், மீனவர்களின் பங்களிப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பயணிக்கின்றோம்.

The post சேவை செய்யக்கூடிய நல்ல அமைப்புகள் மூலம் தான் நாட்டை முன்னேற்ற முடியும் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Poravacheri ,Governor ,RN ,Ravi ,Tamil Seva Sangh ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்