×

நாகப்பட்டினம் அருகே பைக்குகளில் சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி 2 பைக்குகளில் சந்தேகப்படுமாறு வந்த 2 பேரை பிடித்து நாகூர் போலீசார் விசாரித்தனர். இதில் பைக்குகளில் சாராய பாக்கெட்டுகளை மூட்டையாக கட்டி கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் நாகை அடுத்த பெருங்கடம்பனூரை சேர்ந்த முருகநாதன்(20), விஜய்(23) என்பதும், நாகூர் பகுதியில் விற்பனை செய்வதற்காக காரைக்காலில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 ேபரையும் கைது செய்ததுடன் 220 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். கடந்தாண்டு 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 2 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் நாகப்பட்டினம் மாவட்டதை விட்டு நெல் மூட்டைகள் வெளி மாவட்டத்திற்கு செல்லாமல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநில நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post நாகப்பட்டினம் அருகே பைக்குகளில் சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagapatnam district ,Nagor ,Muttam road ,Karaikal ,Naga ,Dinakaran ,
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை