கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் போன்றவை உள்ளன. அடுத்தடுத்து இரண்டு அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த வளாகத்தை சுற்றிலும் மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வளாகத்தில் ஏராளமானோர் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த அலுவலக வளாக பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகளவு தெரு நாய்களின் நடமாட்டம் உள்ளது. இதன் காரணமாக அனைவரும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால், இதே வளாகத்தில் சுற்றித்திரியும் தேசிய பறவையான மயில்களும் பாதிக்கப்படுகிறது. எனவே, அனைவரின் நலன் இந்த வளாக பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்கள் appeared first on Dinakaran.