×

சேரம்பாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்

 

பந்தலூர், ஜன.30: பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கேபிடிஎல் பவுண்டேஷன், சேரம்பாடி சமத்துவ சேவை குழு, சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

சேரம்படி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கனையேந்திரன், சமத்துவ சேவைக்குழு தலைவர் அன்பழகன், நிர்வாகிகள் மணி, சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திருபுகழ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பத்மினி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மருத்துவ குழுவினர் கண் நோய்களுக்கு பரிசோதனை செய்தனர். முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சைக்கு பெற்றனர். 25 பேர் கண் புரைநோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டது.

அதில் 12 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தொடர்ந்து, ரத்த தான முகாமில் கூடலூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர் சீலா குமார், வசந்த், நாராயண மூர்த்தி ஆகியோர் ரத்தம் சேகரித்தனர். முகாமில் 15 பேர் ரத்த தானம் செய்தனர். இதையடுத்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சமத்துவ சேவை குழு நிர்வாகிகள் ஜோன், சின்னத்தம்பி, கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சேரம்பாடியில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Cherambadi ,Bandalur ,Serambadi Government ,Primary Health Center ,Nilgiri District ,Kudalur Consumer Human Resources Environmental Protection Centre ,Nilgiris… ,Dinakaran ,
× RELATED பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய்...