×

நாமக்கல்லில் வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: நாமக்கல் பூங்கா சாலையில், சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் மற்றும் டிரைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் பத்மராஜ் தலைமை வகித்தார். குழந்தைகளுக்கு பள்ளி கல்வி பாடத்திட்டத்திலேயே சாலை விதிகளை பற்றி பாடம் ஏற்படுத்த வேண்டும். டிரைவர்களுக்கு பணிபாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post நாமக்கல்லில் வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Park Road ,Social Justice All Vehicle Drivers Union ,drivers unions ,social justice ,unions ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை