×

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு கருவேப்பம்பட்டியில், 3 நாட்களுக்கு 7 பேர் கொண்ட அணிகள் விளையாடிய டர்ப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதலாம் ஆண்டு எடப்பாடியார் கோப்பை என பெயரிடப்பட்டு, வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன. ராகா ஆயில்ஸ் தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற போட்டியை, அதிமுக அமைப்புச் செயலாளர் தங்கமணி எம்எல்ஏ துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு கிரிக்கெட் விளையாடி, வீரர்களை உற்சாகப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாகரூ.5000, இரண்டாம் பரிசாகரூ.4,500, மூன்றாம் பரிசாகரூ.4000, நான்காம் பரிசாகரூ.3500, ஐந்தாம் பரிசாகரூ.3000, 6ம் பரிசாகரூ.2500, ஏழாம் பரிசாகரூ.2000 என வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாணவ மாணவிகளுக்கு கைப்பந்து, கேரம்போர்டு, கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை தங்கமணி எம்எல்ஏ வழங்கினார்.

The post வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Karuveppatti ,Raga Oils ,Tamilmani ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு நவீன படுக்கை வழங்கல்