×

யாருடன் கூட்டணி? ராமதாஸ் இன்று முக்கிய முடிவு

திண்டிவனம்: பாமக சார்பில் இந்த ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதி அறிக்கையை இன்று (30ம் தேதி) காலை 11 மணியளவில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வெளியிடுகின்றனர். இதில் நாடாளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வருகின்ற பிப்ரவரி 1ம் தேதியன்று சென்னையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என நிர்வாகிகள் கூறினர்.

The post யாருடன் கூட்டணி? ராமதாஸ் இன்று முக்கிய முடிவு appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Tindivanam ,Fund ,BAMAK ,Thilapuram Estate ,Dindivanam ,Ramadas ,Anbumani ,GK Mani ,Ramdas ,Dinakaran ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி