×

பழனி பாபா குறித்து அவதூறு பாஜ மாநில நிர்வாகி கைது

திருச்சி: பழனி பாபா குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக திருச்சி பாஜ மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருச்சி உறையூர் குழுமணி ரோடு மேலபாண்டமங்கலம் அருண் நகரை சேர்ந்தவர் புகழ் (எ) புகழேந்திரன்(44). பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளரான இவர், கடந்த 28ம் தேதி தனது சமூக வலைதளத்தில் இறந்து போன பழனிபாபா குறித்து அவதூறு கருத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விஏஓ செந்தில்குமார் உறையூர் போலீசில் நேற்று புகார் செய்தார். இதையடுத்து 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று புகழேந்திரனை கைது செய்தனர்.

The post பழனி பாபா குறித்து அவதூறு பாஜ மாநில நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Palani ,Trichy ,Palani Baba ,Bhukajendran ,Arun Nagar ,Melapandamangalam ,Tiruchi Varayur Group Road ,BJP Information Technology Unit ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து