×

உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சதி நடக்கிறது: ராகுல் காந்தி குற்றசாட்டு

டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சதி நடக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்ப அனுமதிக்கும் திட்டம் இல்லை என்றும், பல்கலைக்கழக மானியக்குழுவால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் ஒன்றிய அரசு விளக்கமளித்திருக்கிறது.

தகுதியானவர்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான வரைவு விதி கைவிடப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழுவும் அறிவித்திருக்கிறது.உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவது குறித்த வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிழக்கில் இருந்து மேற்காக 6,713 கி.மீ. தொலைவுக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மணிப்பூரில் இருந்து கடந்த 14ம் தேதி தொடங்கிய பயணம், மேற்கு வங்கத்தை கடந்த 25ம் தேதி எட்டியது. சிலிகுரி அருகே நிறைவடைந்த அவரது பயணம், இன்று கிஷன்கஞ்ச் வழியாக பிகாா் மாநிலத்துக்குள் நுழைந்தது. அப்போது பேசிய அவர் கூறியதாவது, உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சதி நடக்கிறது என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றசாட்டு வைத்துள்ளார். மேலும் 45 மத்திய பல்கலை.களில் தோராயமாக 7,000 இட ஒதுக்கீட்டு பணியிடங்களில் 3,000 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 7.1% மட்டுமே தலித், 1.6% பழங்குடியினர் மற்றும் 4.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பு பேராசிரியர்கள்.

உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க பாஜக ஆர்எஸ்எஸ் நினைக்கின்றன. சமூக நீதிக்காக போராடும் மாவீரர்களின் கனவுகளை கொல்லவும், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை ஒழிக்கவும் முயற்சி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதான் அடையாள அரசியலுக்கும் உண்மையான நீதிக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் பாஜகவின் குணாதிசயம்; காங்கிரஸ் இதை ஒருபோதும் அனுமதிக்காது. சமூக நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்; காலி இடங்களை இடஒதுக்கீட்டு பிரிவை சேர்ந்த தகுதியானோரை கொண்டே இடஒதுக்கீடு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சதி நடக்கிறது: ராகுல் காந்தி குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Congress ,SC ,ST ,OBC ,Union government ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...