அம்பை: கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் ஊராட்சியில் ஐக்கிய நல கூட்டமைப்பு மற்றும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொட்டல் கிளை தலைவர் அந்தோ னிராஜ் தலைமை வகித்தார். முகாமில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பொது மருத்துவம் ஆகியவற்றிற்கு நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர் கெவின் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் பொட்டல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். முகாமில் எஸ்டிபிஐ கட்சி நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல் முகம்மது ஷபி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் அம்பை ஜலீல், கல்லிடை நகர தலைவர் கலீல் ரகுமான், செயலாளர் சாகுல் அப்ரிடி, கல்லிடை ராஜா அப்துல் ஹமீத், பொட்டல் கிளை நிர்வாகிகள் சுப்புராஜ், நயினார், பிரகாஷ், மாசாணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கல்லிடைக்குறிச்சி அருகே நடமாடும் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.