×

மாநில பணி மூப்பு பதவி உயர்வு உத்தரவை ரத்து செய்யவேண்டும்

நாமக்கல்: துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க மாநில பணி மூப்பு என்ற அரசின் புதிய உத்தரவை ரத்து செய்யவேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பழனியப்பன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின், ஒன்றிய பணிமூப்பு பதவி உயர்வு உரிமையை பறித்து, மாநில பணிமூப்பு பதவி உயர்வு முறையை திணிக்கும் அரசாணையை விலக்கி கொள்ளப்பட வேண்டும். ஆசிரியர்களின் இந்த கோரிக்கையை ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக்குழு ஏற்றுக் கொள்ளவேண்டும்.

The post மாநில பணி மூப்பு பதவி உயர்வு உத்தரவை ரத்து செய்யவேண்டும் appeared first on Dinakaran.

Tags : State Service ,Namakkal ,Palaniappan ,Namakkal District ,Tamil Nadu Teachers' Alliance ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...