×

அனைத்து போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 710 பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 710 பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் அனைத்து கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து இயக்கப்படுகின்றன.

ஜன.24ம் தேதி முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக நாளை முதல்(செவ்வாய்க்கிழமை) அனைத்து போக்குவரத்து கழகங்களை சேர்ந்த செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் 710 பேருந்துகள் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். மேற்கூறிய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாளை முதல் இயக்கப்பட மாட்டாது.

இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகளும், பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர், திருப்பத்தூருக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். மேற்கண்ட பேருந்து இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும்போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அனைத்து போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 710 பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : All Transport Corporation ,Klambach ,Minister ,Sivashankar ,CHENNAI ,Transport Minister ,Sivasankar ,Kalambakkam ,Klaambakkam ,Dinakaran ,
× RELATED முகூர்த்தம், வார இறுதி நாட்களை...