×

சிவன் சிலை திருட்டு: 2 பேர் கைது

சென்னை: ஆயிரம் விளக்கு வாலஸ் கார்டன் 3வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் பிரபாகரன்(67). கெமிக்கல் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த வாரம் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் வீட்டில் பல ஆண்டுகளாக வைத்திருந்து 2 அடி உயரம் உள்ள பழங்கால சிவன் சிலை மாயாகிவிட்டதாக கூறியிருந்தார். அதன்படி குற்றப்பிரிவு போலீசார் வாலஸ் கார்டன் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுககள் மற்றும் செல்போன் சிக்னல் உதவியுடன் திருவல்லிக்கேணி கபாலி நகர் 4வது தெருவில் பஞ்சர் கடை நடத்தி வரும் முத்து(40) மற்றும் ஆலந்தூர் குப்புசாமி காலனியை சேர்ந்த தமிமுன் அன்சாரி(36) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சிவன் சிலையை போலீசார் மீட்டனர்….

The post சிவன் சிலை திருட்டு: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Suresh Prabhakaran ,3rd Street, Wallace Garden, Thousand Lamps ,Shiva ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்