திருமலை: சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கல்லா ஜெயதேவ். இவர் தெலுங்கு தேசம் கட்சியில் கடந்த 2014ம் ஆண்டு, 2019ம் ஆண்டு குண்டுர் எம்.பியாக வெற்றி பெற்று பதவி வகித்து வருகிறார். மேலும், இவர் அமர்ராஜா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், தொழிலதிபராக வியாபாரத்தில் இருந்து வருகிறார். நடிகர் மகேஷ்பாபுவின் அக்காவை கல்லா ஜெயதேவ் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கல்லா ஜெயதேவ் அரசியலில் களம் இறங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் சேவையில் இருந்த நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் பிரிவு உபச்சார விழா குண்டூரில் நேற்று நடந்தது. விழாவில் கல்லா ஜெயதேவ் கலந்து கொண்டு பேசியதாவது: ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது கடினம் என்பதால் தற்காலிகமாக அரசியலுக்கு ஓய்வு எடுத்துள்ளேன். ஆனால், திரும்ப வருவேன் என்றார்.
The post தெலுங்கு தேசம் கட்சி எம்.பி அரசியலில் இருந்து ஓய்வு appeared first on Dinakaran.