×

கிராம பள்ளிகளில் வளர்ச்சி திட்ட பணி

 

உடுமலை, ஜன. 28: ரூரல் ஸ்கூல்ஸ் வெல்பேர் சொசைட்டி என்னும் கிராமப்புற பள்ளிகளுக்கான கல்வி சேவை அமைப்பு, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் குக்கிராம பள்ளிகளும் நல் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மொத்தம் 30 ஆயிரத்துக்கு மேல் ஆரோ வாட்டர் தொட்டி மற்றும் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தாத நோக்கத்தில் வாட்டர் கேன் மற்றும் பள்ளி தூய்மை பொருட்கள், மாணவர்களுக்கு பரிசுகள் போன்றவற்றை விருகல்பட்டி பள்ளிக்கு வழங்கியுள்ளனர்.

மேலும் பெரிசனம்பட்டி மற்றும் சமத்துவபுரம் பள்ளிகளுக்கும் இதே போல் விழா கொண்டாடினார்கள். குடியரசு தின விழாவில் கிராமப்புற சொசைட்டி அமைப்பின் மூலமாக அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விருகல்பட்டி பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டது.

இதனால் மாணவர்களின் கல்வித் தரம் உயரும் அதேபோல் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று பள்ளி ஆசிரியர் ஜவஹர் கூறினார். குடிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் அகல்யா பிரகாஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் ஜவகர் மற்றும் சமூக சேவகர் பிரபு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிர்வாகிகள் பிரபு, தமிழ் செல்வன், ராஜுசுந்தரம், மணி, முத்துக்குமார், முருகேசன் பங்கேற்றனர்.

 

The post கிராம பள்ளிகளில் வளர்ச்சி திட்ட பணி appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Rural Schools Welfare Society ,Dinakaran ,
× RELATED பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு: பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை