×

கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: ஆயிரக்காண லிட்டர் குடிநீர் வீணாகியது

 

கோபி,ஜன.28: கோபி அருகே உள்ள குருமந்தூர் மேடு மீனவர் காலனி அருகே பெருந்துறை கூட்டு குடிநீர் திட்ட குழாய் வால்வு உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூ.240 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை – கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த திட்டத்தில் நாள்தோறும் கொடிவேரி அணை பகுதியில் இருந்து ராட்சத மின் மோட்டார் மூலமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு பெருந்துறை முழுவதும் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் திட்ட பணியில் குழாய் இணைப்பு உள்ள இடங்களில் ஆங்காங்கே வால்வு பொருத்தப்பட்டு உள்ளது.

அவ்வாறு கோபி அருகே உள்ள குருமந்தூ் மேடு மீனவர் காலனி அருகே பொருத்தப்பட்டு உள்ள குழாய் வால்வு நேற்று முன்தினம் இரவு உடைந்தது. இதனால் குழாயில் இருந்து அதிக அழுத்தத்துடன் வெளியேறிய பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலைகளில் ஓடி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.இரவு நேரத்தில் குழாய் வால்வு உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு தெரியாத நிலையில் நேற்று காலை அங்கு வந்த பொதுமக்கள் வால்வு உடைந்து குடிநீர் வீணாகி வருவதை கண்டு குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.குழாய் வால்வு உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியதை கண்டு பொதுமக்கள் வேதனையடைந்தனர்.

The post கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: ஆயிரக்காண லிட்டர் குடிநீர் வீணாகியது appeared first on Dinakaran.

Tags : Gobi ,Perundurai ,Kurumandur Medu Meenavar Colony ,Dinakaran ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு