×

விடுமுறை நாளில் செயல்பட்ட 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

 

கடலூர், ஜன. 28: கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராமு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை தொழிலாளர் ஆணையர் உத்தரவிற்கிணங்க, கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் கீழ் 1958ம் வருட தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ், தேசிய விடுமுறை நாளான 26ம் தேதி குடியரசு தினத்தில் பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்காத, பணியாளர்கள் பணிபுரிய முன் அனுமதி பெறாத 39 நிறுவனங்களில் (கடைகள் மற்றும் நிறுவனங்கள்,

உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள்) முரண்பாடு கண்டறியப்பட்டு 1958ம் வருட தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ், இணக்க கட்டண வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இனிவரும் காலங்களில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் பணியாளர்களை பணிக்கு அமர்த்தினால் மாற்று விடுப்பு அல்லது
இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும்.

அவ்வாறு பணியாளர்களை பணிக்கு அமர்த்தும்போது உரிய படிவத்தை பூர்த்தி செய்து விடுமுறை நாளிற்கு 24 மணிநேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை,உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

The post விடுமுறை நாளில் செயல்பட்ட 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Assistant Commissioner of Labor ,Ramu ,Chennai Labor ,Commissioner ,Cuddalore Assistant Labor Commissioner ,Enforcement ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை