×

சீனாவிடம் ரூ.16,600 கோடி நிதி கேட்கும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு சீனாவிடம் இருந்து ரூ.16,600 கோடி நிதியுதவி கோரியுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி தவித்து வருகிறது. இதனால் உணவு, எரிபொருள், மின்கட்டணம் உள்ளிட்டவற்றின் உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி நெருக்கடியை சமாளிக்க தன் நட்பு நாடான சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடம் இருந்து அவ்வப்போது கடனுதவி கோரி பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவிடம் இருந்து ரூ.16,600 கோடி நிதியுதவி கேட்டு பாகிஸ்தான் இடைக்கால பிரதமர அன்வர்உல் ஹக் கக்கார் கடிதம் எழுதியுள்ளார்.

The post சீனாவிடம் ரூ.16,600 கோடி நிதி கேட்கும் பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,China ,Islamabad ,Pakistan government ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா