×

தொடர் விடுமுறையால் கூட்டம் அதிகரிப்பு திருப்பதியில் 25 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: 33 அறைகள் நிரம்பியது

திருமலை: தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் 33 அறைகள் நிரம்பி 25 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையான் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 25ம் தேதி 54 ஆயிரத்து 105 பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கை ரூ.3.44 கோடி கிடைத்தது. நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் 25 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. வைகுண்ட காம்பளக்சில் உள்ள 33 அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வைகுண்டம் ஒன்றின் 16 அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு அறையில் 500 பக்தர்கள் காத்திருக்கின்றனர். அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களுக்கு கோயிலில் ஏழுமலையானை தரிசனம் செய்து வைத்து வருகின்றனர்.

மறுபுறம், கூட்டம் அதிகரிப்பதால் பக்தர்கள் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் வரை நீண்ட வரிசை காத்திருந்த பின்னர் நாராயணகிரி க்யூ லைனில் உள்ள வரிசையில் அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தங்கும் வசதியின்றி பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இதற்கிடையே நேற்றுமுன்தினம் ரூ.3.37 கோடி உண்டியல் காணிக்கையும், 33,330 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

The post தொடர் விடுமுறையால் கூட்டம் அதிகரிப்பு திருப்பதியில் 25 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: 33 அறைகள் நிரம்பியது appeared first on Dinakaran.

Tags : Tirupati Darshan ,Thirumalai ,Tirupati Eyumalayan temple ,darshan ,Tirupati ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த...