×

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ELITE)” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ELITE)” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இன்று 27.01.2024 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறன் வாய்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர் வீராங்கணைகளுக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்குவதற்காக “தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ELITE)” திட்டத்தின் கீழ் ஆர்.பிரக்ஞானந்தா மற்றும் டி.குகேஷ் ஆகிய செஸ் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச போட்டி பயிற்சிக்கான செலவினத் தொகை தலா ரூ.15,00,000-க்கான காசோலையினை வழங்கினார்.

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டரும், அர்ஜுனா விருது பெற்றவருமான செல்வி.ஆர்.வைஷாலி அவர்களுக்கு சர்வதேச போட்டிப் பயிற்சிக்கான செலவினத் தொகை ரூ.15,00,000/-க்கான காசோலை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். திருலோகச்சந்திரன், வருகின்ற 03.04.2024 அன்று உலகிலேயே உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்திட தேவையான நிதி உதவித் தொகை ரூ.5,00,000/-க்கான காசோலை வழங்கினார்.

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் கலந்து கொள்ள செல்வி.தி.ஆ.பிரியதர்ஷினி அவர்களுக்கு நுழைவுக் கட்டணம், இரயில் கட்டணம், மற்றும் சீருடைச் செலவினம் ஆகியவற்றுக்கான ரூ.55,000/-க்கான காசோலையினையும், திருச்சி மாவட்டத்தைச் தொகை சேர்ந்த மாற்றுத்திறன் தடகள வீரரான . ரா.ராஜேஷ் அவர்களுக்கு ரூ.12,00,000/- செலவினத்தில் செயற்கைக் கால்கள் அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TN Champions Foundation) நிதியில் இருந்து வழங்கப்பட்டது.

The post தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ELITE)” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Minister of Youth Welfare and Sports Development ,Udhayanidhi Stalin ,Olympic ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...