×

மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை – ஆளுநர்


சென்னை: தேசத்தந்தை மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் பேசவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். 1942க்கு பிறகு மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலனிக்கவில்லை என ஆளுநர் பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்தார். மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை. காந்தியை நான் பெரிதும் பதிக்கிறேன். அவரது போதனைகள் என் வாழ்க்கைக்கு ஒளியாக இருந்து வருகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசியதை ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டதாகவும் ஆளுநர் புகார் தெரிவித்தார்.

The post மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை – ஆளுநர் appeared first on Dinakaran.

Tags : Mahatma Gandhi ,Gov. ,Chennai ,Governor R. N. Ravi ,Governor ,Mahatma ,
× RELATED 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை...