×

பின்னணிப் பாடகி பவதாரிணி உடல் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது!

தேனி: பின்னணிப் பாடகி பவதாரிணி உடல் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணம் அடைந்தார்.

அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. தாயார் மற்றும் பாட்டி சமாதிகளுக்கு இடையே பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது.

 

The post பின்னணிப் பாடகி பவதாரிணி உடல் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது! appeared first on Dinakaran.

Tags : Bhavatharini ,Theni district ,Theni ,Bhavadharini ,Ilayaraja ,Bavadharini ,Sri Lanka ,
× RELATED தேனி மாவட்டத்தில் தினமும் சதம் அடிக்கும் வெயில்: பொதுமக்கள் அவதி