×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 556 கனஅடி

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 649 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 556 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 70.80 அடியாக இருந்து நீர்மட்டம், நேற்று 70.78 அடியாக உள்ளது. நீர் இருப்பு 33.37 டிஎம்சி.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 556 கனஅடி appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Mettur ,Cauvery ,Okanagan ,Okanagan Cauvery ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை...