×

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

 

பொள்ளாச்சி, ஜன. 26: பொள்ளாச்சியில் நேற்று தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாகவும், இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டில் நேற்று (25ம் தேதி) தேசிய வாக்காளர் தினம் என்பதால், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலைகளில் உள்ள அரசு அலுவலகங்களில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், பொள்ளாச்சி வருவாய் துறை சார்பில், உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, தாசில்தார் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை என்பதை உணர்த்தும் வகையிலும், நேர்மையுடன் வாக்களிப்பது குறித்தும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இதையடுத்து, வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியானது கோவை ரோடு, பாலக்காடு ரோடு வழியாக மீண்டும் உதவி கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் பங்கேற்றவர்கள், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.

The post தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : National Voter's Day Awareness Rally ,Pollachi ,National Voter's Day ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி அருகே விஏஓ தற்கொலை: 2 பேர் மீது வழக்கு