- பாபி சிம்ஹா
- ஆலந்தூர்
- சென்னை
- காங்கிரஸ்
- ஆலந்தூர் நீதிமன்றம்
- ஜே.எம்.அருண்
- உசைன்
- ஜமீர் காசிம்
- கொடைக்கானல்
- தின மலர்
சென்னை: சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜெ.எம்.ஆரூணின் சகோதரர் மகன் உசேன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில், பள்ளி பருவ நண்பரான நடிகர் பாபி சிம்ஹாவுக்கு அறிமுகமான ஜமீர் காசிம் என்பவர் கட்டுமான ஒப்பந்ததாரர் மூலம், கொடைக்கானலில் வீடு கட்ட பாபி சிம்ஹா முடிவு செய்தார். 2022ல் தொடங்கிய கட்டுமான பணி 90 சதவீதம் முடிந்த நிலையில், அதற்கான தொகையை பாபி சிம்ஹா தராததால் தகராறு ஏற்பட்டது.
இதனால், எனது தந்தை ஜே.எம்.அமனுல்லா சமரசம் செய்தபோது அவரை பாபி சிம்ஹா திட்டியுள்ளார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, வனத்துறை தொடர்பான பல்வேறு கிரிமினல் வழக்குகளை நான் எதிர்கொண்டு வருவதாக அவதூறு பரப்பினார். என்னைப் பற்றி அவதூறாக பேசியதால், எனக்கு மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் ஏற்பட்டது.
இதற்கான மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி பாபி சிம்ஹாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்றம், உசேனின் வழக்கு குறித்து பாபி சிம்ஹா பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
The post ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகர் பாபி சிம்ஹா மீது வழக்கு: ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.