×

இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

சென்னை: இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி x தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; இந்தி ஆதிக்கமெனும் நெருப்பு தமிழ்நாட்டை உரசாமல் இருக்க, தங்களையே தீக்கிரையாக்கிக் கொண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவாக, தமிழ்நாடெங்கும் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தி திணிப்பும் – அதற்கெதிரான நம் சீற்றமும், இன்றும் விமான நிலையங்களிலும் – ரயில் நிலையங்களிலும் – அஞ்சல் நிலையங்களிலும் தொடருகின்றன. இன்றைக்கு இந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர். கடைசி உடன்பிறப்பு இருக்கிற வரைக்கும் – கருப்பு, சிவப்புக் கொடி இந்த மண்ணில் பறக்கிற வரைக்கும் – அண்ணா – கலைஞர் – கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Language War Martyrs Day ,DMK ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...