×

2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 என மாபெரும் வெற்றியை பெற்றிட அயராத உழைக்க உறுதியேற்றோம் : அமைச்சர் உதயநிதி

திருச்சி : 2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 என மாபெரும் வெற்றியை பெற்றிட அயராத உழைக்க உறுதியேற்றோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 100 நாட்களுக்கு 100 நிகழ்ச்சிகளென நாள் தோறும் மக்கள் பயனடையும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

75 நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், 76வது நிகழ்ச்சியாக திருச்சி டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலையை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளான இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தோம்.தி.மு.கழகம், தேர்தல் அரசியலில் ஈடுபட பெரும்பான்மையான கழக உடன்பிறப்புகள் ஆதரவளித்த தீரர் கோட்டமாம் திருச்சியில், கலைஞர் அவர்களுக்கு திருவுருவச்சிலையை திறந்து வைத்ததோடு, 2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 என மாபெரும் வெற்றியை பெற்றிட அயராத உழைக்க உறுதியேற்றோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post 2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 என மாபெரும் வெற்றியை பெற்றிட அயராத உழைக்க உறுதியேற்றோம் : அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : 2024 Lok Sabha elections 40 ,40 ,Minister ,Udayanidhi ,Udhayanidhi Stalin ,2024 Lok Sabha elections ,Udayanidhi Stalin ,Muthamizharinagar Kalainar ,Dinakaran ,
× RELATED ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது