×

அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஓவியங்களால் அழகு பெற்ற அரசு பள்ளி வளாகம்

ஊத்துக்கோட்டை: சுவற்றில் வரையப்பட்ட அறிஞர்கள், விஞ்ஞானிகளின் படங்களால் பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளி வளாகம் அழகு பெற்றதுடன் மாணவர்களுக்கும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. பெரியபாளையம் ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் பெரியபாளையம், தண்டுமாநகர், ராள்ளபாடி, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், வேலப்பாக்கம், வடமதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6 முதல் 12 வகுப்பு வரை 950 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் மாணவர்கள் தெரிந்து கொள்ளவும், அறிவுத்திறனை வளர்த்து கொள்ளவும் பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைகளில் முகப்பு பகுதியில் உள்ள சுவற்றில் அறிஞர்கள், விஞ்ஞானிகளான அப்துல்கலாம், கலிலியோ, சார்லஸ் டார்வின் ஆகியவர்களின் படங்கள் வரையப்பட்டது. இதனை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள். இதன் மூலம் மாணவர்களுக்கு அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

The post அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஓவியங்களால் அழகு பெற்ற அரசு பள்ளி வளாகம் appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Periyapalayam Government Higher Secondary School ,Government Higher Secondary School ,Periyapalayam Panchayat ,Periyapalayam ,Tandumanagar ,Rallapadi ,Athuppakkam ,Dinakaran ,
× RELATED கடலாடியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைக்க கோரிக்கை