×

திருப்போரூர் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: பாலாஜி எம்எல்ஏ வழங்கினார்

திருப்போரூர்: திருப்போரூர் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை பாலாஜி எம்எல்ஏ வழங்கினார். திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்க தலைவர் அஸ்கர் அலி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை தெமீனா கிரானேப் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் தேவராஜ் முன்னிலை வகித்தார்.

இதில், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி கலந்துகொண்டு, 187 மாணவர்களுக்கும், 240 மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி துணை தலைவர் பரசுராமன், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், விசிக ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், விடுதலை நெஞ்சன், மாவட்ட செய்தி தொடர்பாளர் வேதா அருள், மகளிர் பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்க தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

The post திருப்போரூர் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: பாலாஜி எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Balaji MLA ,Govt ,Tiruporur ,Tiruporur government ,Tiruporur Government Boys Higher Secondary School and ,Girls Higher Secondary School ,Tiruppurur government ,Balaji ,MLA ,
× RELATED செங்கல்பட்டு திருப்போரூர்...