×

மார்க்கபந்தீஸ்வரர் கோயில் உற்சவர் வீதி உலா சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபாடு தைப்பூசத்தை முன்னிட்டு

அணைக்கட்டு, ஜன. 24: தைப்பூசத்தை முன்னிட்டு விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் உற்சவர் வீதி உலா வந்தார். அப்போது பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். அணைக்கட்டு தாலுகா விரிஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற மார்க்கபந்தீஸ்வரர் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கடை ஞாயிறு விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ரத சப்தமி, காணும் பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்களை முன்னிட்டு ஆண்டிற்கு மூன்று முறை கிராம பிரதட்சண ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மார்க்கபந்தீஸ்வரர் மரகதாம்பிகை உற்சவர் சுவாமிகள் கிராமங்களில் பல்லக்கில் ஊர்வலமாக வருவது வழக்கம். அதன்படி தைப்பூசத்தை முன்னிட்டு இந்த ஊர்வலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் இருந்து நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று சேக்கனூர், ஊசூர், மலைகோடி, ஆவாரம்பாளையம், காட்டுப்புத்தூர், பென்னாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சுவாமி ஊர்வலம் நடந்தது. இதற்காக ஒவ்வொரு கிராமங்களிலும் கோயில்கள் மற்றும் பொது இடங்களில் தேர்வு செய்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து பல்லக்கில் ஊர்வலமாக உற்சவர் சுவாமிகள் அங்கு நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்கள் மார்க்கபந்தீஸ்வரர் மரகதாம்பிகைக்கு தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி எடுத்தும் பயபக்தியுடன் வழிபட்டனர். ஒவ்வொரு கிராமங்களிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். இன்று சோழவரம், புதூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உற்சவமூர்த்திகள் பல்லக்கில் ஊர்வலம் நடைெபற உள்ளது.

The post மார்க்கபந்தீஸ்வரர் கோயில் உற்சவர் வீதி உலா சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபாடு தைப்பூசத்தை முன்னிட்டு appeared first on Dinakaran.

Tags : Markakabandeeswarar Temple ,Utsawar Veethi Ula ,Thaipusam ,Virinchipuram ,Markkapantheeswarar Temple ,Utsavar ,Veethi ,Markakapantheeswarar ,Dam taluka ,Utsawar ,ula ,
× RELATED தமிழக கோவில்களும் வழிபாடு முறைகளும்!!!