×

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

சேலம், ஜன.24: சேலம் வீரபாண்டி அருகேயுள்ள பாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (27). இவர் கடந்த 21ம் தேதி அழகாபுரம் ஏரிக்கரை பகுதி வழியாக வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் அவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை தாக்கினர். இதில் அவருக்கு பல் உடைந்து காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மோகன்குமாரை தாக்கியது புதுஏரிக்கரையை சேர்ந்த செந்தில்குமார்(23), அழகாபுரம் நடுவட்டம் வசந்தம்(25), வடக்கு அழகாபுரம் சுரேஷ்(23), சிவா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Salem ,Mohan Kumar ,Palampatti ,Veerapandi, Salem ,Alaghapuram ,
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை