×

₹63 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

காரிமங்கலம், ஜன.24: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் 450 மாடுகள், 600 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் ₹25 லட்சத்திற்கு மாடுகளும், ₹35 லட்சத்திற்கு ஆடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழிகள் ₹3 லட்சத்திற்கு விற்பனையானது.

The post ₹63 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Garimangalam ,Dinakaran ,
× RELATED மாம்பழ கடைகளை அமைத்த வியாபாரிகள்