×

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடி, ஜன. 24:தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி சிப்காட் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மடத்தூர் விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர், தூத்துக்குடி கோரம்பள்ளம், பெரியநாயகபுரம் பகுதியை சேர்ந்த முத்துஇசக்கி (37) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனடியாக, போலீசார் முத்துஇசக்கியை கைது செய்து, அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முத்துஇசக்கி மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Sub-Inspector ,Shanmugam ,Chipcot ,Inspector ,Mohanraj ,Madathur ,
× RELATED தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!