×
Saravana Stores

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்சை தொடர்புபடுத்தி பேச தடை நீக்கக்கோரி அமைச்சர் உதயநிதி மனு: எடப்பாடிபதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2023 செப்.7ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், சனாதனம் குறித்த புரிதல், கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் நிலைப்பாடு, ஆளுநருடன் நட்பு பற்றி குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து வெளியிட்டார். இதனால் அவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்த பதில்மனுவில், கொடநாடு சம்பவம் நடந்த போது எடப்பாடி முதல்வராக இருந்தார் என்பதால் பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து பொதுநலன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டேன். எனவே, தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. எடப்பாடி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை பிப்.26க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்சை தொடர்புபடுத்தி பேச தடை நீக்கக்கோரி அமைச்சர் உதயநிதி மனு: எடப்பாடிபதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi ,EPS ,Koda Nadu ,Edappadi Chennai ,Udhayanidhi Stalin ,Edappadi Palaniswami ,Sanadanam ,Kodanad ,Chennai ,Udayanidhi ,Dinakaran ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்