×

டிடிவி. தினகரன் வாழ்த்து நேதாஜியின் வீரத்தை, தியாகத்தை போற்றுவோம்

சென்னை: நேதாஜியின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என டிடிவி. தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: இந்திய தேசிய விடுதலையை தன் உயிர் மூச்சாகக் கொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட வீரத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் இன்று. உயர்ந்த லட்சியத்தோடும், கொள்கை உறுதியோடும் இறுதிவரை பயணித்து சுதந்திர போராட்டத்தை வலுப்படுத்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திரபோஸ். அவரது வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

The post டிடிவி. தினகரன் வாழ்த்து நேதாஜியின் வீரத்தை, தியாகத்தை போற்றுவோம் appeared first on Dinakaran.

Tags : DTV ,Netaji ,CHENNAI ,TTV ,Dinakaran ,Twitter ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி